தொகரப்பள்ளி சானாரப்பன் மலை நடுகல் கோவில்களில்
60 ஆண்டுகளுக்கு முன்பே 5 அடி உயரமுள்ள மண்குதிரைகள் செய்து வைத்திருந்தார்களாம் மண்குதிரை சுடுமண் சிலை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
இந்த நடைமுறை இருந்திருக்கிறது
இன்றும் கோவில்களில் மண்குதிரை
நேர்த்திக்கடன் தொடர்ந்து வருவது
இதன் சிறப்பு
ஐயனார் குதிரை[தொகு]
இந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் புகழ்பெற்றதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது.[4]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் பதினைந்தடி உயரமான குதிரை அமைக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிழக்கே சிறுநந்தூர் என்ற இடத்தில் இரண்டு உயரமான, சிவப்பு வெள்ளை வண்ணம் பூசப்பட்ட குதிரைகள் உள்ளன. குமாரமங்கலம் என்ற இடத்தில் அச்சுறுத்தும் பாணியில் ஒரு குதிரை உள்ளது. திருப்பாச்சேத்தி கண்மாய்க் கரையில் பிரமாண்டமான குதிரையில் ஐயனார் அமர்ந்துள்ளார். மதுரை கோச்சடையில் இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது தளபதியும் அமர்ந்துள்ளனர். குதிரை மீது மட்டுமின்றி ஐயனார் தனியாக மேடை மீது அமர்ந்திருக்கும் பெரிய சிற்பங்களும், சுடுமண்ணில் அமைக்கப்பட்டன. இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக் கூறலாம். திருச்செந்தூருக்கு அருகில் அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் கோயில்களில் மட்டுமின்றின்றி அம்மன் (காளி)சிலைக்கு முன்னால் குதிரைக்கு நிறுத்தி வைக்கப்படும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. இதற்கு உதாரணமாக மதுரைக்கு அருகில் மடப்புரம் காளியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம்.

Comments
Post a Comment