தொகரப்பள்ளி சானாரப்பன் மலை நடுகல் கோவில்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பே 5 அடி உயரமுள்ள மண்குதிரைகள் செய்து வைத்திருந்தார்களாம் மண்குதிரை சுடுமண் சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடைமுறை இருந்திருக்கிறது இன்றும் கோவில்களில் மண்குதிரை நேர்த்திக்கடன் தொடர்ந்து வருவது இதன் சிறப்பு தொகரப்பள்ளி சானாரப்பன் கோயில் மண்குதிரை இந்த கோவில் ஒரு போர் நடந்த காலத்தினையும் மாதத்தின் நாளையும் நமக்கு தெரிவிகிறது 700 ஆண்டுகளாக இன்னும் அந்த நாளில் விழா எடுக்கப்படுகிறது -அன்புடன் தமிழ் ஐயனார் குதிரை [ தொகு ] கோயம்புத்தூர் வானூர்தி நிலையத்தினுள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் குதிரையின் சுடுமண் படிமம் இந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் புகழ்பெற்றதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக...